எந்த சரக்கும் அடிக்காமலே மலையேறி விட்டார் குமரன். அறுபடை வீடுகளில் ஒன்றல்ல எனினும் அந்த மலைக்கோயிலுக்கு வரும் பகதர்களின் எண்ணிக்கைக்கு குறைவல்ல. சரியாக கீழிருந்து 54வது படியில் அமர்ந்திருந்தார் கண்ணாயிரம். இப்படி சில நேரம் ஆகிவிடுவது உண்டு. நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி, கண்ணாயிரமும் அந்த வகைதான். இரண்டும் கண்ணும் தெரியாமல் போவதற்கு முன்னிருந்தே அவர் கண்ணாயிரம் தான்.
தன்னுடைய தட்டை தட்டு தடுமாறி தொட்டுப் பார்த்தார். தட்டு மாறிவிடக்கூடும் அளவிற்கு வரிசையாக அமர்ந்திருந்தனர் அவரது கொலீகுகள். தடுமாறி தட்டு மாறிவிடமால் தொட்டவரின் கைகளில் எட்டு நாணயங்களே தட்டுப்பட்டன. பத்து ரூபாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆரோக்கியசாமியிடம் நேரம் என்னவிருக்கும் என்று கேட்க எத்தனிப்பதற்குள் அப்பா என ஓடி வந்தான் கண்ணாயிரத்தின் மகன் செல்வம். ஆசையோடு அள்ளி அணைத்தார். பள்ளிக்கூடத்துல இன்னைக்கு என்னப்பா சொல்லிக் கொடுத்தாங்க என்ற அவரின் கேள்வியை Pass செய்த செல்வம், பசிக்குதுப்பா என்றான். தட்டில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ரெண்டு தக்காளி சாதம் வாங்கி வரச் சொன்னார்.
துள்ளி ஓடிய செல்வம் 108 படிகளை அசாதரணமாய் கடந்து இரண்டு பொட்டலங்களுடன் வந்தான். அப்பாவை அருகிலிருந்த பாறைக்கு அழைத்து சென்று அமர வைத்தவன், பாட்டிலில் தண்ணிப் பிடிக்க அருகிலிருந்த டேங்க்கை நோக்கி ஓடினான். தண்ணியோடு வந்தவன் எங்கப்பா பாக்கெட்டு என்றான். சட்டையே இல்லாத கண்ணாயிரம் என்னப்பா என்றார். தக்காளி சாதம் ரெண்டு வச்சேனே என்று பார்வையை திருப்பினான். நாய்கள் இரண்டு கவ்விக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. நாய் தூக்கிட்டு போச்சுப்பா என்று கத்திய செல்வத்தை அணைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்கினார் கண்ணாயிரம்.
கொஞ்சம் பொறுத்துக்குப்பா என்று மீண்டும் லைனில் சென்று அமர்ந்தார். சற்று நேரத்தில் ஐந்து ரூபாய் ஒரே காய்னாக தட்டில் விழ செல்வம் செல்வம் என்று செல்வத்தை தேடினார். ஓடி வந்தான். இந்தாப்பா. நீ போய் சாப்பிட்டு வா என்றார். உனக்கும் வாங்கிட்டு வர்றேன். எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கே என்றான்.
ஏது?
நானும் லைன்ல உட்க்கார்ந்தேன்ப்பா.
அடித்து விட்டார் கண்ணாயிரம். உனக்கு எதுக்குடா இந்த பொழப்பு? இதெல்லாம் வேணாம்ன்னு தானே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வேணாம் டா கண்ணு. உனக்கு படிப்பு வரலைன்னாலும் பரவாயில்ல. உழைச்சு சாப்பிடனும்டா. எந்த வேலை செஞ்சாலும் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடு. உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான். என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு. உனக்கென்ன என்று அழத் தொடங்கியவரை அழாதப்பா என்றான் செல்வம். தக்காளி சாதம் வாங்கிவர மீண்டும் கீழே வந்தான்.
E252 ரக Benz கார் அங்கிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. கையில் ஒரு பெட்டியுடன் இறங்கினார் அந்த கோட்டு சூட்டு மனிதர். யாரையோ தேடியவர் பின் மலையை நோக்கி நடந்தார். அவரை நோக்கி ஓடிய செல்வம் “அய்யா. நான் இந்தப் பொட்டிய தூக்கிட்டு வரவா? கொடுக்கறத கொடுங்க” என்றான். இதுக்குத்தான் ஆள தேடினேன் என்றவர் சிரித்தப்படி கொடுத்தார். மலை உச்சிக்கு அவர்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும். நடை சாத்தப்பட்டிருந்தது.
என்னப்பா கோயில் மூடியிருக்கு என்றார் அவர்.
தெர்ல சார். வாரம் ஒரு நாள் இப்படி மூடுவாங்க. என்னைக்குன்னு தெரில என்றான்.
இங்க உண்டியல் இருக்குதாப்பா?
அதோ.அங்க இருக்கும் சார்.
கண்களை மூடி கையெடுத்து கும்பிட்டு சொன்னார். “குமரா.உன்னை நம்பித்தான் இந்த பிசினச ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாபடியாய் போது. என் காணிக்கையா இத ஏத்துக்குப்பா என்றவர், பெட்டியில் இருந்த சில கரன்சி கட்டுகளை எடுத்து உண்டியலில் போட்டார். மலையை விட்டு இறங்கியவர் செல்வத்திடம் அஞ்சு ரூபாய் நோட்டை நீட்டினார். சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்.
ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்று அஞ்சு ரூபாயை தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். செய்வதறியாமல் நின்ற செல்வம் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து குனிந்து அஞ்சு ரூபாயுடன் அருகில் இருந்த கூரான கல்லையும் எடுத்தான். ”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.
********************************************************
பி.கு: இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
பிடிச்சிருந்தா பின்னூட்டமோ அல்லது தமிளிஷ் மற்றும் தமிழ்மண ஓட்டுப் போடுங்க. எத்தனை பேருக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான்


40 கருத்துக்குத்து:
கலக்கல் தல, வாழ்த்துக்கள்.
கொஞ்ச நேரத்துக்கு எங்க பாலா மாதிரி ஆயிட்டீங்களோன்னு நெனச்சேன்.
:))
நல்ல இருக்கு தல ...
ஜெயமோகன் கிட்ட டியூஷன் going அஹ ???
கன்னடத்து எழுத்தாளர் திரிவேணி அவர்களின் நாவலை நேரம் கிடைத்தால் வாசித்து பாருங்க ......
"பி.கு: இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது"
அதுக்கு ஏழு போதைல மட்டையான கதையை எழுதி இருந்த நல்ல இருந்திருந்திற்க்கும்.....
ஹீ ஹீ ஹீ
enna sir erndu days aga attendance illai .....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..
//ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்றபடி தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். //
தல எனக்கு இந்த இடம் புரியலை. ஐந்து ருபாய் கொடுத்த பிறகு தானே இந்த சம்பவம், பிறகு எதை தூக்கி போட்டார் அந்த ஆள் இருபது ருபாய்யையா? அப்புறம் அந்த கல்லை எடுத்துக் கொண்டு என்ன செய்ய முயல்கிறான் அந்த சிறுவன்?, அந்த ஆளையை அடிக்க கல்லை எடுக்கிறானா இல்லை அதை உண்டியலில் போட எடுக்கிறானா?
//சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்//
பையன் புத்திசாலியா தெரியுறானே ?
ஒரு வேளை எனக்கு தான் புரியலையா. இன்னும் சற்று பயிற்சி தேவையோ???
வாழ்த்துக்கள் சகா..வெற்றி..
‘தெர்ல’ வார்த்தை சிங்க்க் சூப்பர் சகா.
வாழ்த்துக்கள் நண்பா.
நன்றி தராசு. உங்கள் கருத்து கொஞ்சம் தைரியம் கொடுத்திருக்கு
***************
நன்றி மைதீஸ்
*****************
@மேவீ,
ஏனிந்த மர்டர் வெறி?
**************
நன்றி தீப்பெட்டி
***************
@ப்ளீச்சிங்க்,
எங்க கொடுத்தார்? அஞ்சு ரூபாயை நீட்டினார்னுதானே இருக்கு. அப்புறம் கல்லை உண்டியல்ல போட்டு என்ன நடக்க போது? :))
**************
@நர்சிம்,
நன்றி சகா.. ஒரு வித தயக்கத்துடனே இதை பதிவிட்டேன்.. போட்டியில் வெல்லாவிட்டாலும் கதை ஒக்கே ரகம் என்ற திருப்தி..
***********
நன்றி மண்குதிரை
Romba nallaa irukku.. :)
மன்னிக்கவும். கதை எனக்கு பிடிக்கவில்லை. அதற்காக பரிசு பெறாது என்றில்லை.... உள்ளத்தில் தோன்றியதை சொன்னேன்.. (இது எனது முதல் பின்னூட்டம்.. உங்கள் பதிவுகளை நான் மிக ரசிப்பவன்.. குறிப்பாக புட்டிக்கதைகள்)
ம்ம்ம்......ஒரு நல்ல கதை எழுதிட்டீங்க, உங்களிடம் இருந்து ஒரு புட்டி கதை எதிர் பார்க்கிறேன்.
கல்லை எடுத்துகொண்டுபோய் உண்டியலில் போட்டான்னா..ஆன்மீகம்
கல்லை எடுத்து கார் கன்னாடியை போட்டான்னா..நாத்தீகம்
வெற்றி பெற வாழ்த்துக்கள். கார்க்கி..
நன்றி ஸ்ரீமதி
நன்றி வணங்காமுடி. கருத்திற்கு நன்றி
பப்பு மூனு பதிவுக்கு முன்புதானே புட்டிக்கதை போட்டேன். படிச்சிங்களா?
கலை, என்ன ஒரு தத்துவம்?????
நன்றி சங்கர்ஜி
***********
மக்கா,600 ஹிட்ஸுக்கே முக்குது..15 கமெண்ட்டுதான் ஆச்சு.. நானே எப்பவாச்சும் இப்படி எழுதறேன்.. இப்படி பண்ணா எப்படி? நாளைக்கே ஒரு மரண மொக்கை வருது.. ங்கொய்யால பாவமே பார்க்க கூடாது போல.
நல்லா இருக்கு சகா..
நான் கூட ஆரம்பத்தில் நான் கடவுள் செகண்ட் பார்ட் என்று நினைத்து விட்டேன்..
சகா நீ கதையெல்லாம் எழுதுவியா?
நல்லாயிருக்கு சகா
நன்றாக இருக்கிறது ...
ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா, ஆரம்பிச்சுட்டாய்ங்க.. நர்சிம் ஆழம் பார்க்க அமைதியாக இருப்பது தெரிகிறது.. நாங்களும் அமைதியா இருப்போம்ல.. அப்படியே சிலந்தி சுத்தினாலும், சுத்திரும்.!
தலைப்பு ஏதோ பக்திக்கதை மாதிரி இருக்குது..
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
சகா..கலக்கிட்டிங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
நன்றி வினோத்
அத்திரிம் மேலே சிறுகதைகள்ன்னு தனி tab இருக்கு பாருங்க. நானெல்லாம் உயிரோசைல வந்தவனாக்கும்
நன்றி சூரியன்
நன்றி ஆதி..
நன்றி கோபி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் :)
நல்லாருக்கு கார்க்கி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வித்தியாசமான முயற்சி. வெற்றிபெற வாழ்த்துகள்.
//”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.//
classic. wish you all the best.
நல்லாருக்கு கார்க்கி!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் மச்சி!
வெற்றி பெற வாழ்த்துகள்
\\நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி,\\
அருமை கார்க்கி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
கார்க்கி இஸ் சைனிங் தல..!
கண்ணாயிரம் கண்லயே நிக்கிறார்.
வாழ்த்துக்கள்..!
இன்னாது இது..!
கமெண்ட் மாடுரேசனு..?.
பஸ்கீ...சாரி..கார்க்கி..
இயல்பான நடையுடன் நன்றாகவே இருக்கிறது.
முருகன் உங்களுக்கு வெற்றியை தரட்டும்...
பெயருக்கும் அவரது இயல்புக்கும் இருக்கும் முரண்களை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
"கரப்பான் பூச்சியைக் கணடாலே அலரும் வீரக்குமார்" ரசித்தேன்.
நம்ம பதிவுலக நண்பர் ஒருவர் குழந்தை மாதிரி முகம் உடையவர்...
அவர் பதிவு பெயர் "அக்னி பார்வை" !!!!!!!!!!!
அன்புடன்
மறத்தமிழன்.
இப்பதான் படிச்சேன் கார்க்கி. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
டேலன்ட் இருக்கு. எப்பவும், ஹிட்ஸ், பின்னூட்டம், பின்தொடர்பவர்கள் என்ற கணக்கிலேயே பார்க்காமல், இந்த மாதிரியும் அவ்வப்போது எழுதலாம். பெரிய நடிகர்கள் நல்ல படம் பண்ற மாதிரி.
All the best Karki.
அனுஜன்யா
S.U.P.E.R.B.
:)
முருகன் நிச்சயம் நீங்கள் விரும்பியதைத் தருவான்..!
நல்லாயிருக்கு சகா. இந்த மாதிரியும் அடிக்கடி எழுதுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துகள்
Post a Comment