1) காதல் மனிதனுக்கு அவசியமா?
ஜென் கவிதையா அல்லது உருது கவிதையா என நினைவிலில்லை. ஆனால் வைரமுத்து அழகாய் தமிழ்ப் படுத்தியிருப்பார்.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
காதல் என்பதே இதயத்தின் மொழிதானே? அது இல்லாமல் எதற்கு மனிதனாய்?
2) அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகுக்கும் உருவத்திற்கும் தொடர்பேயில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது பார்ப்பவரின் ரசனை சம்பந்தப்பட்டது என்று சொல்வேன். சிறுவயது முதலே நாம் பார்த்துக் கொண்டிருப்பவர், எப்போதும் நமக்கு ஒரே மாதிரிதான் தெரிவார். ஏனெனில் அவரை நம் நன்கு புரிந்துக் கொண்டிருப்போம். ஆனால் அவரை புதிதாய் பார்ப்பவர், அன்று அவர் எப்படி இருக்கிறாரோ அதை மட்டும்தான் சொல்லுவார். இதனால் தான் காதலிப்பவர்களுக்கு தன் காதலி உலகிலே அழகானவராக தெரிகிறார். அழகு, நிரந்தரமானதுதான்.
3) பணம் அவசியமா?
பணம் அவசியம்தான். அதற்கு மாற்றுக் கண்டுபிடிக்காதவரை. அதிக பணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பணமே இல்லாமல் இந்த உலகத்தில் எப்படி வாழ முடியும்? நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்
4) கடவுள் உண்டா?
கடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. சாஃப்ட்வேர்தான் என்றும் சொல்லும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீக்கள் கூட ஹார்ட்வேராகவும் கடவுள தொழுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. பெரியார் சொன்ன ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். “கடவுளை மற. மனிதனை நினை”. அவர் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவரை கவனிக்க வேண்டிய வேலை எனக்கில்லை. அம்மாவுக்கு ஷாப்பிங் பிடிக்கும். கூட செல்வேன். அதேப் போல் கோவிலுக்கு செல்லவும் பிடிக்கும். கூட செல்வேன். விபூதி வைத்துவிடுவார்கள். அவர்களுக்காக வைத்துக் கொள்வேன். அவ்வளவே. மழுப்பவுது போல் தெரிகிறதா? பளிச்சென்று சொன்னால் ”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”
அழகு,காதல்,பணம், கடவுள்?
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
1) கத்துக்குட்டி
2) கார்ல்ஸ்பெர்க்
3) யோ வாய்ஸ்
4) அக்கீலீஸ்
5) சிங்கக்குட்டி
என்னை அழைத்த அருணா டீச்சருக்கு நன்றி


35 கருத்துக்குத்து:
கலக்கல் கார்க்கி.
தத்துவ சாமி அவதாரம்...
ஐய்.. மீ த பஸ்டா? அப்ப இப்போ
ரெண்டு...
மீ த தர்ட்
//கடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. //
நீங்க ஐ.டி துறைன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு. :)
//”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், இப்பவே கண்ணக் கட்டுதே.......
தசாவதாரம் படத்தில் கமல் கடைசில் அசின் இடம் இப்படி சொல்லுவர்.
"கடவுள் இல்லன்னு நான் சொல்லல இருந்தா நல்ல இருக்கும்ன்னு தான் சொல்லுறேன்"
அப்ப கடவுள் இருக்காரா இல்லையானு ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் ஒரு மனிதனின் மனநிலை என்று இதை எடுத்து கொள்ளலாம் தானே
//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்// சபாஸ். அருமையான ஒப்பீடு.
மறுபடியும் முதலிலிருந்தா......
//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்// சபாஸ். அருமையான ஒப்பீடு.
ரிப்பீட்டு. :)
சுவாரசியமான பதில்கள். கடவுள் இல்லை என்று சொல்வதற்குத்தான் என்னா பில்ட்டப்பு.!
if you selected money as a insulin then you deserve god, if you desised love and affection as insulin then you belive god.
\\ PITTHAN said...
if you selected money as a insulin then you deserve god, if you desised love and affection as insulin then you belive கொட்.\\
சாமி, எனக்கு புரியல.
செத்த, பிரியுற மாதிரி சொல்லுங்க.
\\காதல் என்பதே இதயத்தின் மொழிதானே? அது இல்லாமல் எதற்கு மனிதனாய்?\\
இதயத்தின் வலின்னு கூடத்தான் சொல்றாங்க. அது இல்லாம இருக்கலாம்ல.
எப்பிடீ..?
\\ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. \\
ம்ம்..அன்டர்வேரு..!
போயிட்டு லெட்டர் போடுறேன். பை.
என்னை தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி கார்க்கி..
இப்ப தான் ஒரு தொடர் பதிவு போட்டேன் இன்று மாலை உங்களது பதிவை தொடர்கிறேன்.
உங்களது கருத்துக்கள் உங்களைப்பற்றிய எண்ணத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள்..
hmm....
//”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”//
அருமையான வரிகள் சக. அழகாய் பதிலலித்திருக்கிறீர்கள்...
பிரபாகர்.
நன்றாக இருக்கிறது. ஆனால் கடவுள் பற்றித்தான் குழம்பிப் போய் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கடவுள் பார்த்துக் கொள்வார்.
சாஃப்ட் ஆகிட்டீங்களே!
பழைய நக்கல் கம்மி ஆயிடுச்சு! யாராவது உங்கள....?
ரைட்டு வேல முடிஞ்சிருச்சி~
நன்றி சுசி
நன்றி அம்மிணி
தராசண்னே, இன்னும் வறாங்க. ரெடியா இருங்க. நீங்க எவ்ளோ நல்லவரு
ராஜராஜன், கடவுள் இல்லை
நன்றி பாலகுமாரன்
நன்றி கல்யாணி
நன்றி ஆதி. அதே
நன்றி பித்தன். ஏதோ சொல்றிங்க்
நன்றி ராஜூ. தந்தியா போடுப்பா
நன்றி யோ.நேரமெடுத்து கொள்ளுங்கள்
நன்றி அமுதா மேடம்
நன்றி பிரபாகர்
நன்றி ஜெஸ்வந்தி. பார்த்துப்பார்..
நன்றி பப்பு. கடவுள் இருக்கும் இடத்தில் நக்கல் அடிக்கலாமா?
nalla pathilkal
அன்பே சிவம்.
/4) கடவுள் உண்டா?
கடவுள் என்பவர் ஹார்டுவேரா, சாஃப்ட்வேரா என்பதிலே குழப்பம் இருக்கிறது. சாஃப்ட்வேர்தான் என்றும் சொல்லும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீக்கள் கூட ஹார்ட்வேராகவும் கடவுள தொழுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. பெரியார் சொன்ன ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும். “கடவுளை மற. மனிதனை நினை”. அவர் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். ஆனால் அவரை கவனிக்க வேண்டிய வேலை எனக்கில்லை. அம்மாவுக்கு ஷாப்பிங் பிடிக்கும். கூட செல்வேன். அதேப் போல் கோவிலுக்கு செல்லவும் பிடிக்கும். கூட செல்வேன். விபூதி வைத்துவிடுவார்கள். அவர்களுக்காக வைத்துக் கொள்வேன். அவ்வளவே. மழுப்பவுது போல் தெரிகிறதா? பளிச்சென்று சொன்னால் ”கடவுள் இருந்தாலும், தேவையில்லை. ஆனால் இல்லையென்பதால் இந்தக் கேள்வியே தேவையில்லை”/
அருமை
அன்புடன்
திகழ்
//இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
//
உருது கவிதை.
சுவாரசியமான பதில்கள்
கடவுள பத்தி எழுதும் பொது மட்டும் தெளிவாயிருந்தீங்க போல
நானும் என் பங்குக்கு கொஞ்சம் போட்டு தாளிச்சு வச்சிருக்கேன்... கொஞ்சம் வந்து ருசி பாருங்களேன்....
You have scored 100 marks for your promptness kaarki!!!...
நாஞ்சில் நாதம் வாழ்க.
என்ன சகா சரிதானே?
சகா, உங்கள் மொழியில் கடவுளும் காதலும் அழகு
நேர்மையான பதில்கள் கார்க்கி..
கடவுள், பணம் இவற்றுக்கான பதில்களை ரசித்தேன்...
ஷாப்பிங்,கோயில் ஒப்பீடு பிடித்திருந்தது... :-)
//நாமெல்லாம் சக்கரை வியாதிக்காரர்கள். பணம், இன்சுலின்//
அட இது நல்லா இருக்கே.. :-))
நீங்க கோவிலுக்கு போறது கடவுளுக்காக இல்லைனு ஒத்துக் கொண்ட நேர்மை பிடிச்சிருக்கு. அம்மா கொஞ்சம் கவனிங்க. ;))
பதிவு எழுத எடுத்துக் கொண்ட நேரம் செகண்ட்ஸில் இருக்கும் போல?! ஆனா நல்லாருக்கு! :)
nice.
Post a Comment