Nov 12, 2009

எங்கிருந்தாலும் வாழ்க

 

அன்பு நண்பன் ஆனந்திற்கு,

Untitled

       என்னவென்று ஆரம்பிப்பது? எழுதத் தொடங்கிய நான், நம் வசந்த காலங்களை எண்ணிப் பார்க்கிறேன். சமூகம்,அரசியல், பொருளாதாரம்,சினிமா, என் காதல், உன் காதல், நம் நண்பர்களின் வளர்ச்சி பற்றி எல்லாம் பேசி இருந்தும், இருவரும் திட்டமிட்டே பொறுப்பற்றுக் கிடந்தப் பொழுதுகளே காட்சி தருகின்றன. இனி அவளைப் பற்றிக் கவிதையே எழுதக் கூடாது என நீ கேட்ட சத்தியத்தை செய்த நான், பின்னொரு மழைக்கால மாலையில் கவிதையென்று என் புலம்பல்களை எழுதியதைப் பார்த்தாய். மெளனமாய்  சென்றுவிட்டாய். அந்த பார்வையில் வழிந்த சின்னதோர் மன்னித்தலை மறக்கவா முடியும்?

        திடீரென நிச்சயிக்கப்பட்ட உன் (காதல்)திருமணத்திற்கு கூட நான் வரவில்லை. எனக்கு வாய்க்காத அந்த வரம் உனக்கு கிடைத்ததில் எனக்கு முழு மகிழ்ச்சியே. ஆனால் அந்த தருண‌த்தில் உன் எதிரே நான் வந்து உன்னைக் காயப்படுத்த எனக்கு மனமில்லை. இப்போதெல்லாம் நான் யார் திருமணத்திற்கும் போவதில்லை.

       உன்னை வழியனுப்ப வந்த நாள் நினைவிருக்கிறதா? விமான நிலையத்தில் உள்ள விளக்குகள் எல்லாம் உன்னை வாழ்த்தி சிரிப்பது போலவேத் தோண்றியது எனக்கு. எங்கே அருகில் வந்தால் என் கலங்கிய கண்களை கண்டு கொள்வாயோ எனத் தள்ளியே இருந்தேன் நான். பாஸ்போர்ட் பத்திரம்.. டிக்கெட் எங்கே? ,பெட்டிகள் ஓக்கேவா என பதில் தெரிந்தக் கேள்விகளையே மீண்டும் மீண்டும் திணித்து சோகத்தின் வாசலை அடைக்க முயன்றேன்.இதோ,இன்னும் பசுமையாய் இருக்கிறது நீ கையசைத்து விடைபெற்ற காட்சி.

    இன்று, இந்த நிமிடங்களில் ஒவ்வோர் அணுவிலும் நேசம் நிறைந்து நிற்கிறேன்.என் கண்களில் தேங்கிய துளிகள் உனக்கானவை. நாளை என்பது எப்படியும் இருக்கலாம். என் கண்ணீர் அனைத்தும் காய்ந்து போகலாம்.நீ இங்கேயே இருந்தால் நான் எப்படி மகிழ்வேனோ அந்த மகிழ்ச்சியின் அடர்த்தி நாளை குறைந்து போகலாம். உனக்கும் எனக்குமிடையே திட்டு திட்டாய் ரகசியங்கள் வளரலாம். நாளை என்பது எப்படியோ போகட்டும். இந்த நொடியின் தவிப்பை மட்டும் நம் இருவரும் உணர்ந்தால் போதும் என்கிறேன்.

"திறக்காத காடுகளின் ஒரு முனையில் தொடங்கும் காற்றைப் போல நம் பிறவி.தொடர்ச்சியான அறிமுகங்க‌ளில் இசையாகிறோம்". இறந்தகாலங்களை கனவுகளாய்ப் பிழிந்து கொண்டு அவ்வப்போது ருசி. ஏதோ ஒரு திருப்பத்தில் கை குலுக்கும் விரல்கள் ஒர் இடைவெளியில் சிலையாகிப் போகும்.

நேற்றைய சிலைகளை கனவில் நிரப்பு.
நாளைய சிலைகளின் தகவல் அனுப்பு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மச்சி.

*********************************************

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவன் என் மிகச் சிறந்த நண்பன். ஏழுவுக்கும், எனக்கும் மிகவும் பிடித்த நண்பன். இவனையெல்லாம் எப்படி விட்டு வைத்திருக்கிறேன் என்றேத் தெரியவில்லை. நான் பிளாக் எழுதுவது கூட இவனுக்கு தெரிந்திருக்காது. நான் ஓப்பன் செய்து தந்த மெயிலே இருக்கிறதா எனத் தெரியவில்லை.. ஃபோன் செய்து பேச வேண்டும். ஐ மிஸ் யூ மச்சி.

31 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் said...

ஆனந்திற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பட்டிக்காட்டான்.. said...

ஒரே பீலிங் சகா..

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்த்.

என்ன சொல்றது கார்க்கி... உங்கள மாதிரியே நட்பின் நினைவு அவருக்கும் நிச்சயம் இருக்கும்.

//ஏதோ ஒரு திருப்பத்தில் கை குலுக்கும் விரல்கள் ஒர் இடைவெளியில் சிலையாகிப் போகும்.//

கட்டாயமா பேசுங்க. முடிஞ்சா எப்டி இருக்கார்னும் எழுதுங்க.

டம்பி மேவீ said...

எனக்கு என் நண்பன் ஞாபகம் வந்துருச்சு .....

உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்

(tamilmanathil serthachu)

மகேஷ் said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா!

Cable Sankar said...

arumai kaarki

சின்ன அம்மிணி said...

ஆஸில எந்தப்பக்கம் இருக்கார். தெரியும்போது முடிஞ்சா சொல்லுங்க.

அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தராசு said...

நெகிழ்ச்சியான் பதிவு.

ஸ்ரீமதி said...

பிறந்த நாள் வாழ்த்துதானே? கொஞ்சம் சந்தோஷமா தான் ஆரம்பிக்கறது??? ஹ்ம்ம்ம்... என் இனிய வாழ்த்துகள் உங்க நண்பருக்கு.. :))

யோ வொய்ஸ் (யோகா) said...

சகா உங்கள மாதிரி மொக்கவும் யாருமில்ல, நெஞ்ச நக்கவும் யாருமில்ல.

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

ஆனந்த் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சகா இந்த இடுகையில உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுருச்சுன்ற ஆதங்கமும் தெரியுதே...
ஃப்ரியா வுடு மாமே....

முரளிகுமார் பத்மநாபன் said...

அரசியல்வாதி ரேஞ்சுக்கு ஆரம்பிச்சி அழுகாச்சியா முடிச்சிட்டிங்களே சகா. ஆனந்த் என்கிருந்தாலும் வாழ்க.

பித்தன் said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா!

வெற்றி said...

உருக்கமான பதிவு...

ராஜன் said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நர்சிம் said...

வாழ்க நும் நட்பு சகா.

புன்னகை said...

வாழ்த்துக்கள்! ஆனந்தின் பிறந்த நாளுக்கும் உங்களுடைய ஆழமான நடப்பிற்கும்! :-)

கும்க்கி said...

வாழ்க நும் நட்பு சகா..

அய்யய்யோ இவர் அப்படியே ஆகிட்டாரா..?

கும்க்கி said...

ஆனந்திற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும்...அதை சொன்ன விதத்திற்க்கு நுமக்கு சே..உமக்கு நன்றியும்.

விக்னேஷ்வரி said...

மெளனமாய் சென்றுவிட்டாய். அந்த பார்வையில் வழிந்த சின்னதோர் மன்னித்தலை மறக்கவா முடியும்?

பதில் தெரிந்தக் கேள்விகளையே மீண்டும் மீண்டும் திணித்து சோகத்தின் வாசலை அடைக்க முயன்றேன்.இதோ,இன்னும் பசுமையாய் இருக்கிறது நீ கையசைத்து விடைபெற்ற காட்சி.

நேற்றைய சிலைகளை கனவில் நிரப்பு.
நாளைய சிலைகளின் தகவல் அனுப்பு. //

ரசித்துப் படித்த வரிகள்.
அழகான நட்பு. அதற்கு மேலும் அழகு சேர்க்கும் வாழ்த்து.

கார்க்கி said...

வாங்க முரளி

பட்டிக்காட்டன், உங்க ஃப்ரெண்டு மெயில் வந்துச்சு சகா

சுசி, நல்லாவே இருக்கான்

டம்பீ, யார் அவரு?

நன்றி மகேஷ்

நன்றி கேபிள்ஜி

அம்மிணி, அவர் பெர்த் பக்கம் இருக்காம்.. அப்பரா ,லோயரான்னு கேட்காதிங்க

நன்றி தராசு

ஸ்ரீமதி, பிறந்த நாள்தான். ஆனா எனக்கு கஷ்டமா இருந்துச்சு :)) சரக்கு கிடைக்கலையேன்னு

யோ, நன்றிப்பா

விட்டாச்சு வசந்த்

நன்றி முரளிகுமார்

நன்றி பித்தன்

நன்றி ராஜன்

நன்றி வெற்றி

நன்றி நர்சிம்

நன்றி புன்னகை

நன்றி கும்க்கி. எப்போ போய் சேர்ந்திங்க?

நன்றி விக்னேஷ்வரி. உடல் நலம் எப்படி இருக்கு?

Kathir said...

நல்லா எழுதி இருக்கீங்க சகா...

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

Karthik said...

செம பதிவு கார்க்கி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவருக்கு! :)

//பிறந்த நாள்தான். ஆனா எனக்கு கஷ்டமா இருந்துச்சு :)) சரக்கு கிடைக்கலையேன்னு

:D :D

கல்யாணி சுரேஷ் said...

முகம் மட்டுமே மனதில் நிற்கும், முகவரி தொலைந்து போன பல நண்பர்களின் நினைவு வந்திடுச்சு கார்க்கி.

angelintotheheaven said...

nice
b'day wishes to ur frnd

அன்புடன் அருணா said...

அடடா.....உங்கள் நண்பர் உங்களைச் சேர வாழ்த்துக்கள்!

நேசன்..., said...

நீங்க லவ் பெய்லியர் ஆனவரா??.....அதான் கவிதை எல்லாம் அப்பப்போ ஒரு மார்க்கமா இருக்கா!.....அப்போ சரி!......

விந்தைமனிதன் said...

அய்யன்மீர்! புதிய பதிவனாகிய நான் எழுதியுள்ள “மவனே செத்தீங்கடா...” பதிவின் தொடர்ச்சியை தங்களைப் போன்ற் மூத்த பதிவர்கள் எழுதி எளியேனுக்கு அருளுமாறு.....

அன்பரசன் said...

என் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை said...

கொஞ்சம் தாமதமோ...?
ஆனந்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
(பார்க்க நல்லவர் மாதிரி இருக்காரு.. உங்க ஃப்ரெண்டா... :-) )
//பாஸ்போர்ட் பத்திரம்.. டிக்கெட் எங்கே? ,பெட்டிகள் ஓக்கேவா என பதில் தெரிந்தக் கேள்விகளையே மீண்டும் மீண்டும் திணித்து சோகத்தின் வாசலை அடைக்க முயன்றேன்.//
நிதர்சனம் வரிகளில் வழிந்தது.
//நேற்றைய சிலைகளை கனவில் நிரப்பு.
நாளைய சிலைகளின் தகவல் அனுப்பு//
இது கார்க்கி(இந்த) எழுதியதா இல்லை கார்க்கியின்(அந்த) அப்பா எழுதியதா... சூப்பர்....
//சகா உங்கள மாதிரி மொக்கவும் யாருமில்ல, நெஞ்ச நக்கவும் யாருமில்ல.
//
ரசித்தேன்...
//புதிய பதிவனாகிய நான் எழுதியுள்ள “மவனே செத்தீங்கடா...” பதிவின் தொடர்ச்சியை//
படிக்க வாங்கன்னு சொல்றாரா இல்லை வரவேண்டாம்னு சொல்றாரா.. தலைப்பே மிரட்டுதே...
பதிவும், கமெண்டுகளும் களைகட்டுகிறது சகா...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நட்பு மீண்டும் மலர வாழ்த்துகள்.!