இதைப் படித்து விட்டு என்னை யாராவது திட்ட வேண்டுமென்றால் வேறு வார்த்தை உபயோகப்படுத்தவும்.

எருமைகள் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் அச்சங்கத்தின் தலைவர் எருமைநாயகம் நிதானமாக பேசிய பேச்சின் தொகுப்பு இதோ..
" காலம்காலமாக ஸ்லோமோஷன் எக்ஸ்போர்ட்ஸ் என நம்மை ஏளனம் செய்வதோடு அல்லாமல் , தமிழில் நம்மை எழுதும் போது 'எருமை' எனச் சிறிய 'ரு' போடுகிறார்கள்.இது நம்மை அவமதிக்கும் செயலாகும். அற்ப எறும்புகளுக்கு பெரிய 'று' நமக்கு சிறிய 'ரு' வா? மனிதர்களுக்கு திக்கான பாலைத் தருவது நாம். ஆனால் எறும்புகள் அவர்கள் உணவையே திருடுவது மட்டுமல்லாமல் கண்ட இடங்களில் கடிக்கின்றன. அத்திருடர்களுக்கு சுறுசுறுப்பு பட்டமா? ஒரு மிதிமிதித்தால் கூழ்கூழாகிவிடும். அந்தப் பொடியன்களுக்கு பெரிய'று'. நமக்கு சிறிய 'ரு' வா? இது பெரிய தவறு.. இனியும் இந்த அராஜகம் தொடர்ந்தால் நமது பிறப்புரிமையான சந்து, தெரு, சாலை மற்றும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை ஆரம்பிப்போம் என எச்சரிக்கிறேன்.
'எமனேறும்பரியே' என்று காலம் காலமாக சிறுமைப் படுத்தபட்டு வருகிறோம். இது தருமமா? தருமராஜன் தருமராஜன்தான். உயிர்களைப் பறிப்பதற்கு எம்லோகத்தில் இருந்து விரைவாக பறக்கும் கருடனையோ குதிரையையோவா பயன்படுத்துகிறார்? மெல்ல மெதுவாக நடைபோடும் நம்மைதானே வாகனமாக தேர்ந்தெடுக்கிறார். மானிடனின் உயிர் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று நாம் மெல்ல அசைந்து வருவதை உணராத பதர்களை என்னவென்று சொல்வது?
இது மட்டுமில்லாமல், வாகன ஓட்டிகள் பாதசாரிகளை திட்ட நம் பெயரைத்தான் இழுக்கிறார்கள். "டேய் எருமை மாடு ஓரம் போடா" என்ற வசவில் உள்ள ஏளனமும், எகத்தாளாமும், சாலைக்கு நான்தான் எஜமானன் என்ற ஏகாதிபத்திய ஆணவமாகும்.. நிஜமாகவே 'வூட்டுல சொல்ட்டு வந்ததைப் போல' சிந்தையின்றி நடக்கும் மனித ஜடங்கள் ஏசப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அதில் நம் பெயரை இழுப்பது எருமையின் அருமை பெருமை தெரியாமல் சிறுமைப் படுத்தும் முயற்சியே. சென்னை நகரத்து எருமைகள் எவ்வளவு அழகாக சாலையைக் கடக்கிறார்கள் என வாயும் வயிறுமாய் இருக்கும் டிராஃபிக் போலிஸைக் கேட்டால் சொல்வார்கள்.
எதிர் சாலையில் ஒட்டப்பட்டுள்ள கவர்ச்சி நடிகையின் போஸ்டரை சுவைக்க விரும்பும் எருமை மாடு ஆறறிவுள்ள மனிதனைப் போல் சட்டென்றா குறுக்கே பாய்கிறது? சாலையோரமாகப் பொறுமையுடன் நின்று வலதுபக்க டிராஃபிக் குறைந்ததவுடன் கண்களைப் பெண்கள் பக்கம் மேயவிடாமல் எச்சரிக்கையுடன் நடந்து, சாலையின் மத்தியில் கணநேரம் நின்று பொறுமையாய் கடந்து வருகிறது. இப்படி இருக்கையில் அவசர கொடுக்கை மாந்தர்களை 'டேய் எருமை மாடு' என்று வாகன ஓட்டிகள் திட்டுவது அவர்கள் நம் எருமைப் பாலை அளவுக்கு மீறி குடித்து மழுங்கடித்துக் கொண்ட மந்தப் புத்தியால் என்று சொன்னால் மிகையாகாது.
எனதெருமை சகோதர சகோதரிகளே இவ்வளவு இன்னல்களிலும் நமக்கெ ஆறுதலான விடயம் உண்டென்றால் அது நம்மை மிகவும் நேசிக்கும் லாலு அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சராகி அலங்கரித்ததே ஆகும். ஆனால் இந்த முறை அதுவும் நடக்காமல் போனது நமது துரதிர்ஷ்டமே. அவரிடம் சொல்லி நம்மை இனிமேல் எருமை மாடு அல்ல 'அருமை மாடுகள்" என்று அழைக்க வேண்டும் என்பதை அடுத்த குறைந்த பட்ச செயல்திட்டத்தில் கொண்டு வரச் சொல்லுவோம்.”
இவ்வாறு எருமைநாயகம் அவர்கள் பேசினார்
**************************
பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுதிய பதிவு இது. ஜே.எஸ். ராகவனின் ஒரு புத்தகத்தில் எருமைகளை வைத்து ஒரு நகைச்சுவை கதை எழுதி இருந்தார். அதை உள்வாங்கிக் கொண்டு என் ஸ்டைலில் எழுத செய்த முயற்சி. ரொம்ப வேலைங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

27 கருத்துக்குத்து:
அன்பின் கார்க்கி...
வார்த்தைகளே கிடைக்கவில்லை...
பாராட்டத்தான்.
எறு(ரு)மைகள் வாழ்க :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ரொம்ப பிடிச்சது கார்க்கி இந்த எழுத்துநடை எங்க போச்சு இப்போ?
அதிலும் அந்த சின்ன ரு பெரிய று மேட்டர் அசத்தலப்பா...
நல்லா இருக்கு கார்க்கி. வழக்கமான கார்க்கி பதிவு மாதிரி இல்லையேன்னு நினைச்சேன். அப்பறம்தான் இதப்படிச்சேன். //பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுதிய பதிவு இது.//
வித்தியாசமான அ(எ)ருமையான படைப்பு நண்பா.
ரு - இதுதான் பெரிய ரு இல்லை ? யாராவது confirm பண்ணுங்கப்பா
அறுமை, அறுமை.
துவக்கத்தில் எழுதிய பதிவா?????
பெறுமை, பெறுமை.
கார்க்கி ,,,,,, என்னாச்சு உங்களுக்கு ...
இன்னொரு விஷயம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி யாரோ இதே மாதிரியான பதிவை எங்கோ படித்தாய் ஞாபகம் ..
பதிவு நல்ல இருக்கு. என்னை கூட எருமை என்று சில பேர் திட்டி இருக்காங்க .... அவங்க எல்லோரையும் பழிக்கு பலி வாங்க இந்த பதிவின் லிங்க் தரலாமா ????
அது சரி, உங்களுக்கு மட்டும் எதுக்கு சின்ன 'ர'...
இன்று முதல் நீங்கள் காற்க்கி
லேபிள்ல அனுபவம்னு போட்டிருக்கலாம்ல. எருமை நாயகம் யாருன்னு எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். ;)
நல்லா இருக்கு கார்க்கி.
நல்ல சுவாரஷ்யமா இருக்கு நண்பா
எருமைகளே,
அறுமையான இடுகை.
கறுமை நிறத்தின் பெறுமைகளே!
பொறுமையாக போராடுங்கள்.
எறுமைகள் ஆவீர் ஒரு நாள்..
காற்கி,
பதிவுலக பேறவை உங்களுக்கு எறுமை பதிவர் என்று பட்டமளிக்கிறது!!
நன்றி சிவாண்ணா
வசந்த், அப்படியா சொல்றீங்க? அம்மிணி சொல்றத பாருங்க :))
அம்மிணி, நீங்க வசந்த் சொல்றத பாருங்க :))
நன்றி பூங்குன்றன்
we, ’ரு’ வ எவ்ளோ பெருசா போட்டாலும் அது சின்ன் ரு தான்
தறாசு, நன்ரி நன்ரி
மேவீ, ஒன்னும் ஆகலையே. நீங்க சொல்வதுதான் எனக்கு புரியல
ரொம்ப நன்றி காற்த்திக் :))
விக்கி, என் கூட இருக்கிறவங்களுக்கு நடப்பதும் நம்ம அனுபவம்ன்னு சொல்லலாமே :))
நன்றி மண்குதிரை
செந்தில் நாதன் :)))
எனதெருமை கார்க்கியே.. இது ஒரு சிறந்த பதிவு.!
//மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது.//
கார்க்கி.. படிக்க ஆரம்பிச்சதும் நீங்க வேற எதையோ எழுத வரீங்கன்னு
நினச்சுட்டேன். ஆனா இது முழுக்க முழுக்க வேற. சூப்பர்.
நான் அவங்கள (மரியாதை போதுமா)
விட்டுட்டு மாடுன்னு மட்டும்தான் திட்டுவேன் :))
:) nice once
எருமை நல்லா இருக்கு.... ???!!!! :)
ரொம்ப நாள் கழிச்சு ஒரு தூள் பதிவு...
சூப்பர்ப் கார்க்கி...
அ‘று’மை சகா
சரி கார்க்கி ...
அந்த பின்னோட்டத்தை டைப் பண்ணும் பொழுது வழக்கம் போல் பார்வை கொஞ்சம் மங்கி விட்டது ....
Good one :)
:))
நல்ல பதிவு காற்க்கி!
(உங்களுக்கும் பெறிய ற் தான் போட்டிறுக்கேன்! :) )
நல்லா இருக்கு கார்க்கி.
பெறிய பாறாட்டு காற்க்கி நீங்க ஒறு நல்ல பதிவற்னு நிறுபிச்சீடீங்க
ஹி...ஹி...
நல்லாயிருக்கு சகா..
//.. விக்னேஷ்வரி on November 24, 2009 11:04 AM said...
லேபிள்ல அனுபவம்னு போட்டிருக்கலாம்ல. எருமை நாயகம் யாருன்னு எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். ;)..//
இது உண்மையா சகா.. ??!!
ம்ம்ம்ம் :))
//எருமைகள் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் அச்சங்கத்தின் தலைவர் எருமைநாயகம் நிதானமாக பேசிய பேச்சின் தொகுப்பு இதோ..//
நீங்க எதுக்கு அங்க போனிங்க??????????????
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கி!!! :-)
Post a Comment