டிஸ்கி: இது உண்மைச் சம்பவம்
_________________________________
வறண்ட தமிழ் மாநில கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா? களிமண் நிலம் பிளந்து போயிருக்கும். கருத்து, சுருங்கிய தோலுடனும் ஒரு குச்சியிடனும் தாத்தா கண்ணுக்கு மேல் கைகளை வைத்து வானம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய ஏரியின் நடுவே நிற்கும் தண்ணீரானது எத்தனை காகங்கள் வந்து கற்கள் போட்டாலும் மேலே வராது. கர்ணணுடன் பிறந்த கவச குண்டலத்தைப் போல எல்லோரும் கையில் ஒரு குடத்துடன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும்.
இப்படி ஒரு பாலைவனமாகத்தான் இருந்தது எங்கள் அலுவலகமும். நான் இங்கே சேர்ந்து 9 மாதமாகிறது. ஆனால் 9 வருட வரலாறும் கேட்டுவிட்டேன். தினம் தினம் மதிய இடைவெளியில் இது குறித்து பேசாமல் இருக்கவே மாட்டோம். காதலிக்கு நேரமில்லை முத்துராமன் போல "அலுவலகத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த 4 பெண்களும் எட்டாவாது படிக்கும் பிள்ளைகளின் பராக்கிரமங்களை பேசியே போரடித்துக் கொண்டிருந்தனர். இதையே காரணம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற ஆழ்ந்த யோசைனையில் நான் இருந்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.
எங்கள் அலுவலக சீனியர் ஆன்ட்டி அதிசயமாக எங்கள் ஃப்ளோருக்கு வந்தார்.எங்கள் ஃப்ளோர் என்பது இரன்டாவது தளம். இங்கே கட்டிளம் காளையர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எல்லோரும் முதல் தளத்திலே முடங்கிவிட வேண்டியதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு சிவாஜிப்பட ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவர் ஏன் இங்கே வருகிறார் என யோசிக்கத் தொடங்கினேன். பாபாவை தொடர்ந்து வந்த சந்திரமுகி போல, குசேலனுக்கு பின்னால் வந்த சிவாஜியைப் போல ஆன்டிக்கு பின்னால் வந்தார் அந்த கோதுமை நிற அழகி. அவரை கொஞ்சம் ரசித்து வர்ணிக்க வேண்டியிருப்பதால் தனிப்பத்திக்கு போய்விடலாம். வாருங்கள்.
100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம் நின்றுபோயிருந்தது.
திஸ் இஸ் கார்க்கி என்ற ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவர் பெயர் சொல்லும் நேரம் அந்த பொம்மை என்னை நோக்கி கைகள் நீட்டியிருந்ததால் காதில் விழவில்லை. "அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா" என நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்கள் கோமாவில் இருந்தேன் என யூகிக்கிறேன்.
மொத்த ஆஃபிஸும் இதை பற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்கள்.இப்படியொரு அழகியை "இதை" என்றா சொல்வது என்ற கோவம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த கதையை சொல்கிறேன். இது நல்லதல்ல என்று இன்று காலையில் இருந்து அவர் இருந்த திசைப்பக்கமே போகாமல் இருந்தேன்.மணி 1 ஆனபோது மீண்டும் அதே குசேலனும், சிவாஜியும் வந்தார்கள். என் மொக்கை பராக்கிரமங்களை எடுத்து சொன்னாராம் குசேலன் ஆன்ட்டி. என்னுடன் லன்ச் சாப்பிட விரும்புவதாக அந்த பறவை சொன்னது. நான் பறக்க ஆரம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த குஜராத்தி பறவை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வந்திருக்கிறது.
ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா..
அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..
கோதுமையே..கோதுமையே..
மாலை சூடும் குஜ்ஜு குமரியே
மனசு தனியே பாடிக்கொண்டிருந்தது.
லன்ச் முடிந்தவுடன் இதை தோழியிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று அழைத்தேன். "இரண்டாவது நாளே ஸ்லீவ்லெஸ்ஸா?நீ ஒரு நாலு நாள் கழிச்சு கதை சொல்லு அம்மு" என்று வைத்துவிட்டாள். புரிந்துதான் சொன்னாளா?????
-பறவை பறக்கும்


12 கருத்துக்குத்து:
ஏன் அந்த பொண்ணு ப்ளாக் படிக்குமா ??
இல்லாட்டி போனா பதிவு போட்டு என்ன பயன்... வேலைல இறங்கினலவது பரவாஇல்ல
இதுஇக்கு குஜராதில கமெண்ட் போடவா இல்ல தமிழ்லய?
இனி குஜராத்தி அப்டேஸ்-ஐ எதிர்பார்க்கலாம்... :))) lol..
மாப்பி ஆஃபிஸ் அட்ரஸ் குடு.. க்ராஸ் செக் பண்ணனும்... நமக்கு இந்த வகுத்தல் பெருக்கல்லாம் சரிபடாது... :))))
பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும். //
அட்டகாசம் கார்க்கி
ஆனாலும் கூட வேலை பார்க்க போறவங்களை இப்படியா ரசிக்கிறது?
என்ன ஓரு கவித்துவம் மனுசன் பிச்சு உதறுகின்றார்,,,, ம் சொல்லுங்க மிச்ச கதையும்
நல்ல பதிவு
என்ன அண்ணாச்சி இங்கயுமா
''100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம்'' .இப்படி ஒரு வர்ணிப்பை கேட்ட்தே இல்லை அருமை அண்ணா
\\ ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா.. அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா.. கோதுமையே..கோதுமையே.. மாலை சூடும் குஜ்ஜு குமரியே \\
அதே மெட்டில் பாடிப்பார்த்துவிட்டு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
கலக்கல் கார்க்கி... பட்டய கிளப்புங்க...
I like ur blog... ur writing s awesome!tnx Mr.Kar(rules)ki.
இந்த பிளாக்கை அந்த பியூட்டி படிப்பாங்களா?
Post a Comment